புளி சாதம்
![]() |
| புளி சாதம் - Goblet Moon |
தேவையான பொருட்கள் :
அரிசி - 500 கிராம்
நல்லெண்ணெய் - 40 மில்லி
பெருங்காயம் - சிறிதளவு
சீரகம் - 2 கிராம்
கடலைப்பருப்பு -2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10 எண்ணிக்கை
புளி - 75 கிராம்
உப்பு - தேவையான அளவு
வேர்க்கடலை - 50 கிராம்
செய்முறை :
சாதத்தை பதமாக வடித்து பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்க வேண்டும். நல்லெண்ணையை வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் மிளகாயை நன்கு வறுத்து வைத்து கொள்ள வேண்டும்.
கடலைப்பருப்பு,பெருங்காயம் பாதி பதம் வரும் வரை வறுத்து அதனுடன் சீரகம் மற்றும் கடுகு சேர்த்து கடலைப்பருப்பு நன்கு சிவக்கும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
வேர்க்கடலையை தோல் நீக்கி வறுத்து பின் அதனுடன் புளியைக்கரைத்து சக்கை நீக்கி ஊற்றி உப்பையும் போட்டு நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு மஞ்சள் தூளையும் தூவி புளி நன்கு வெந்து பதம் வரும் வரை வைத்திருந்து பின்னர் இறக்கி சிறிது ஆற வைத்து அதன் பிறகு பாத்திரத்தில் வைத்துள்ள சாதத்தின் மீது பரவலாக ஊற்றி கிளறி விட சுவையான புளிசாதம் கிடைக்கும்.
Click To See Our New Reciepies
குறிப்பு :
புளிசாதம் செய்த ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.


No comments:
Post a Comment