சில்லி சிக்கன்
தேவையான பொருட்கள் :
கோழிக் கறி - 500 கிராம்
பூண்டு - 5
பச்சை மிளகாய் - சிறிதளவு
எண்ணெய் - 100 கிராம்
வினிகர் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கோழிக் கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோழிக் கறி, வினிகர், உப்பு, மிளகாய், போட்டு வேக வைக்கவும். பூண்டு,பச்சை மிளகாய் அரைத்து அதனுடன் போட்டு கிளறி அரை மணி நேரம் ஊற வைத்து கோழிக் கறி கலவையை போட்டு நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமாக எரிய விடவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும். எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும் போது இறக்கி வைக்க வேண்டும். சூடோடு சாப்பிட கூடுதல் சுவை கிடைக்கும்.

No comments:
Post a Comment