பொதுவாக நீர் ஊற்றுகளைப் பூங்கா, கட்டடங்கள் மற்றும் சாலைகளை அழகுபடுத்த அமைப்பார்கள். தென்கொரியா தலைநகர் சியோலில், ஹான் நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள பன்போ பாலத்துக்கு(Banpo Bridge) புதுமையான நீர் ஊற்று ஒன்றை அமைத்து உள்ளனர். 1,140 மீட்டர் நீளம் உள்ள இந்தப் பாலத்தின் இருபுறமும் கிட்டத்தட்ட 10,000 சிறிய எல்.ஈ.டி. (LED) பல்புகள் பொருத்தப்பட்ட துளைகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். உயரத்தில் இருந்து பார்த்தால், பாலம் இறக்கை முளைத்துப் பறப்பதுபோல் காட்சி அளிக்கும். இது ‘நீளமான பால நீர் ஊற்று’ என்ற பெயரில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.
No comments:
Post a Comment