சித்தூர்: இந்தியாவில் செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டு 17 ஆண்டுகள் முடிவடைந்து, இன்று(08/21/2012) 18-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம் செல்போன். புறாக்கள் மூலம் செய்தி பரிமாறிக்கொண்ட அரசர் காலம் தொடங்கி படிப்படியாக இந்த தகவல் பரிமாற்றம் பல்வேறு வளர்ச்சிகளை கண்டுவந்திருக்கிறது. தபால் மூலமாக தகவல்களை பரிமாறிக்கொண்ட நாம், பின்னர் தொலைபேசி மூலமாக பரிமாறினோம். வெளிமாநிலத்துக்கு பேச டிரங்கால் பதிவு செய்து பல மணிநேரம் காத்திருந்தும், அவசர தகவல்களை தெரிவிக்க தந்திகளை உபயோகப்படுத்தியும் வந்தோம். அதன்பிறகு நாளடைவில் எஸ்டிடி, இன்டர்நெட் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்தது. நடுவில் சிறிது காலம் பேஜர் புழக்கத்தில் இருந்து காணாமல் போனது. இந்த நேரத்தில், வளர்ந்த நாடுகளில் செல்போன்கள் அறிமுகமானது.
இந்தியாவில் செல்போன் முதன்முதலில் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள முடிந்தது. குறுந்தகவல்கள், படங்கள், வீடியோ காட்சி பரிமாற்றமும்
சாத்தியமானது.
ஆரம்ப கால கட்டத்தில் பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கும் ஒரு சாதனமாக இருந்த செல்போன் தற்போது ஏழை, எளிய மக்களும் கட்டாயமாக உபயோகப்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது. ஆரம்ப காலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்டன. பல தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டிக்கொண்டு இறங்கியதால், கட்டணங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டன. செல்போன் விலையும் குறைந்து கொண்டே வருகிறது. பல தனியார் நிறுவனங்கள் போட்டி சிம்கார்டுகளை விற்பனை செய்கின்றன. தற்போது செல்போனில் ரேடியோ, மியூசிக், இன்டர்நெட், 3டி போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகை போலவே செல்போன் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் செல்போன் அறிமுகமாகி 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18ம் ஆண்டு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment