Monday, 4 June 2012

SSLC FIRST MARK

SSLC First, Second and Third Ranks  :
State First Ranks
பத்தாம் வகுப்பு தேர்வு - தஞ்சை ஸ்ரீநாத் முதலிடம்

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1.30 மணியளவில் வெளியானது. தஞசாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் முதலிடமும், 2 வது ரேங்கை 6 மாணவ, மாணவிகளும் , 3 வது ரேங்கை 11 பேரும் பிடித்தனர். சமச்சீர் பாடத்திட்டத்தின்படி நடந்து முடிந்த முதல் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. மாணவன் ஸ்ரீநாத் 500 க்கு 497 மார்க்குகள் பெற்றுள்ளார். இவர்தஞ்சாவூரில் உள்ள பி.ஆர்., பப்ளிக் பள்ளியை சேர்ந்தவர். 2 ம் இடத்தை 6 பேர் பிடித்துள்ளனர். அவர்கள் விவரம்வருமாறு: 2வது இடம் பிடித்தவர்கள் யார் ? ஜென்கின் காட்பிரே-- ஹெப்ரான் மெட்., மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்,நந்தினி இக்னேஷியஸ் கான்வென்ட்,பாளையங்கோட்டை, மகாலட்சுமி- எஸ்.ஜே.எஸ்.ஜப், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மகாராஜநகர், திருநெல்வேலி, சுவாதி சென்னியப்பன்- பாரதி வி.பவன் பள்ளி, திண்டல், ஈரோடு, கவின்- சேரன் மெட்.,பள்ளி, கரூர், அகிலா- வைசா வி.ஐ.டி.,மெட்ரிக் பள்ளி, புழுதிவாக்கம் செங்கல்பட்டு. மேற்கூறிய 6 பேரும் 495 மார்க்குகள் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் - மார்ச் மாதங்களில் நடந்த தேர்வில் 10. 84 லட்சம் மாணவ,மாணவிகள்
எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்த்ராதேவி இன்று வெளியிட்டார். முடிவு வெளியாவதில் பிரச்னைகளை களைய தேசிய தகவல் மையம் உதவியுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அந்தந்தபள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயன்பாட்டுக்கான பெயர் மற்றும் ரகசிய குறியீடு மூலம் அந்தந்த தளங்களில் சென்று தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொண்டனர். பத்தாம் வகுப்பு மறுக்கூட்டல் விண்ணப்பிக்க 5 ம் தேதி முதல் 7 ம்தேதி வரை கால நிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மறுக்கூட்டல் தொடர்பாக ஆங்கில பாடத்திற்கு ரூ. 305- ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205 -ம் வசூலிக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும்.

Share This Your Friends
Facebook Technorati Digg This Stumble Stumble Twitter

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner